இரவையும் பகலையும் நாம் இரு அத்தாட்சிகளாக ஆக்கினோம். ஆக, இரவின் அத்தாட்சியை மங்கச்செய்தோம். இன்னும், பகலின் அத்தாட்சியை ஒளிரக்கூடியதாக ஆக்கினோம், உங்கள் இறைவன் புறத்திலிருந்து (வாழ்வாதார) அருளை நீங்கள் தேடுவதற்காகவும் ஆண்டுகளின் எண்ணிக்கையையும் (மாதங்கள் இன்னும் நேரங்களின்) கணக்கையும் நீங்கள் அறிவதற்காகவும் (இப்படி அமைத்தோம்). மேலும், எல்லா விஷயங்களையும் நாம் மிக விரிவாக விவரித்தோம்.
Al-Isra' 17:12
Compare 2 Tamil translations
وَجَعَلْنَا اللَّيْلَ وَالنَّهَارَ آيَتَيْنِ ۖ فَمَحَوْنَا آيَةَ اللَّيْلِ وَجَعَلْنَا آيَةَ النَّهَارِ مُبْصِرَةً لِتَبْتَغُوا فَضْلًا مِنْ رَبِّكُمْ وَلِتَعْلَمُوا عَدَدَ السِّنِينَ وَالْحِسَابَ ۚ وَكُلَّ شَيْءٍ فَصَّلْنَاهُ تَفْصِيلًا
DragHold to move · × to hide
இரவையும் பகலையும் நாம் அத்தாட்சிகளாக ஆக்கினோம். (அதில்) இரவின் அத்தாட்சியை மங்கச் செய்தோம். (பல இடங்களிலும் சுற்றித் திரிந்து) உங்கள் இறைவனின் அருளை நீங்கள் தேடிக்கொள்வதற்காக பகலின் அத்தாட்சியைப் பிரகாசமாக்கினோம். ஆண்டுகளின் எண்ணிக்கையையும் (மாதங்களின்) கணக்கையும் (இதன் மூலம்) நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாகவே நாம் விவரித்துள்ளோம்.