Al-Isra' 17:40

Compare 2 Tamil translations

أَفَأَصْفَاكُمْ رَبُّكُمْ بِالْبَنِينَ وَاتَّخَذَ مِنَ الْمَلَائِكَةِ إِنَاثًا ۚ إِنَّكُمْ لَتَقُولُونَ قَوْلًا عَظِيمًا

القرآن الكريم

DragHold to move · × to hide

ஆக, (மனிதர்களே!) உங்கள் இறைவன் உங்களுக்கு ஆண் பிள்ளைகளை சொந்தமாக்கிவிட்டு, (உங்கள் கற்பனை படி தமக்கு) வானவர்களை பெண் பிள்ளைகளாக ஆக்கிக் கொண்டானா? நிச்சயமாக நீங்கள் பெரிய (அபாண்டமான பொய்யான) கூற்றை கூறுகிறீர்கள்.

Omar Sharif ibn Abdussalam

(மனிதர்களே!) உங்கள் இறைவன், ஆண் மக்களை உங்களுக்குச் சொந்தமாக்கி விட்டு, வானவர்களைத் தனக்குப் பெண் மக்களாக ஆக்கிக் கொண்டானா? (இவ்வாறு கூறுகின்ற) நீங்கள் நிச்சயமாக மகத்தான (பொய்க்) கூற்றையே கூறுகிறீர்கள்.

Abdulhamid Al-Baqawi