ஏழு வானங்களும் பூமியும் அவற்றிலுள்ளவர்களும் அவனைத் துதிக்கிறார்கள். இன்னும், அவனைப் புகழ்ந்து துதித்தே தவிர எந்த ஒரு பொருளும் இல்லை. எனினும், (மனிதர்களே) அவர்களின் துதியை நீங்கள் அறிய மாட்டீர்கள். நிச்சயமாக அவன் மகா சகிப்பாளனாக, பெரும் மன்னிப்பாளனாக இருக்கிறான்.
Al-Isra' 17:44
Compare 2 Tamil translations
تُسَبِّحُ لَهُ السَّمَاوَاتُ السَّبْعُ وَالْأَرْضُ وَمَنْ فِيهِنَّ ۚ وَإِنْ مِنْ شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَٰكِنْ لَا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ ۗ إِنَّهُ كَانَ حَلِيمًا غَفُورًا
DragHold to move · × to hide
ஏழு வானங்களும் பூமியும் இவற்றிலுள்ள அனைத்தும் அவனைப் புகழ்ந்து கொண்டே இருக்கின்றன. (இவற்றில்) ஒன்றுமே அவனைத் துதி செய்து புகழாதிருக்க வில்லை. எனினும், அவை துதி செய்து புகழ்வதை நீங்கள் அறிந்து கொள்வதில்லை. நிச்சயமாக அவன் பொறுமையுடையவனாக, மன்னிப்புடையவனாக இருக்கிறான்.