நீங்கள் நன்மை செய்தால் (அது) உங்கள் ஆன்மாக்களுக்குத்தான் நன்மை செய்தீர்கள். மேலும், நீங்கள் தீமை செய்தால் அதுவும் அவற்றுக்கே (தீமையாக அமையும்). ஆக, (இரண்டு வாக்குகளில்) மற்றொரு வாக்கு வந்தபோது, (மீண்டும்) உங்கள் முகங்களை அவர்கள் கெடுப்பதற்காகவும் (-தோல்வியினால் உங்கள் முகங்கள் இழிவடைந்து வாடிபோவதற்காகவும்), முதல் முறை மஸ்ஜிதில் அவர்கள் நுழைந்தவாறு (இம்முறையும்) அவர்கள் அதில் நுழைவதற்காகவும், அவர்கள் வெற்றிகொண்ட ஊர்களை எல்லாம் அழித்தொழிப்பதற்காகவும் (அவர்களை மீண்டும் உங்கள் மீது அனுப்பினோம்).
Al-Isra' 17:7
Compare 2 Tamil translations
إِنْ أَحْسَنْتُمْ أَحْسَنْتُمْ لِأَنْفُسِكُمْ ۖ وَإِنْ أَسَأْتُمْ فَلَهَا ۚ فَإِذَا جَاءَ وَعْدُ الْآخِرَةِ لِيَسُوءُوا وُجُوهَكُمْ وَلِيَدْخُلُوا الْمَسْجِدَ كَمَا دَخَلُوهُ أَوَّلَ مَرَّةٍ وَلِيُتَبِّرُوا مَا عَلَوْا تَتْبِيرًا
DragHold to move · × to hide
(அச்சமயம் அவர்களை நோக்கி) நீங்கள் நன்மை செய்தால் (அது) உங்களுக்குத்தான் நன்று. நீங்கள் தீமை செய்தால் அது உங்களுக்கே (கேடாகும் என்றும் நாம் கூறினோம். எனினும், அவர்கள் அநியாயம் செய்யவே ஆரம்பித்தனர். ஆகவே,) இரண்டாவது தவணை வந்த சமயத்தில் (உங்களைத் துன்புறுத்தி) உங்கள் முகங்களை கெடுத்து, முந்திய தடவை மஸ்ஜிதுல் அக்ஸாவில் நுழைந்தவாறே (இந்தத் தடவையும் அதனுள்) நுழைந்து, தங்கள் கைக்குக் கிடைத்தவற்றையெல்லாம் அழித்து நாசமாக்கக்கூடிய (கடின சித்தமுடைய) அவர்களை (நாம் உங்கள் மீது) ஏவினோம்.