திட்டவட்டமாக ஆதமுடைய சந்ததிகளை (-மனிதர்களை) நாம் கண்ணியப்படுத்தினோம். இன்னும், கரையிலும் கடலிலும் அவர்கள் வாகனித்து செல்லும்படி நாம் செய்தோம். இன்னும், நல்ல உணவுகளிலிருந்து நாம் அவர்களுக்கு உணவளித்தோம். இன்னும், நாம் படைத்த அதிகமான படைப்புகளை விட நாம் அவர்களை முற்றிலும் மேன்மைப்படுத்தினோம்.
Al-Isra' 17:70
Compare 2 Tamil translations
وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَىٰ كَثِيرٍ مِمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا
DragHold to move · × to hide
ஆதமுடைய சந்ததியை நிச்சயமாக நாம் கண்ணியப்படுத்தினோம். கரையில் (வாகனங்கள் மீதும்) கடலில் (கப்பல்கள் மீதும்) நாம்தான் அவர்களைப் பயணிக்க வைக்கிறோம். நல்ல உணவுகளையும் நாமே அவர்களுக்கு அளிக்கிறோம். நாம் படைத்த (மற்ற உயிரினங்களில்) பலவற்றின் மீது (பொதுவாக) நாம் அவர்களை மிக மிக மேன்மையாக்கி வைத்திருக்கிறோம்.