Al-Isra' 17:80

Compare 2 Tamil translations

وَقُلْ رَبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ صِدْقٍ وَاجْعَلْ لِي مِنْ لَدُنْكَ سُلْطَانًا نَصِيرًا

القرآن الكريم

DragHold to move · × to hide

மேலும், (நபியே!) கூறுவீராக: “என் இறைவா! என்னை நல்ல நுழைவிடத்தில் (மதீனாவில்) நுழையவை. நல்ல வெளியேறுமிடத்தில் (மக்காவில்) இருந்து என்னை வெளியேற்று! உதவக்கூடிய ஓர் ஆதாரத்தை உன்னிடமிருந்து எனக்கு ஏற்படுத்து!”

Omar Sharif ibn Abdussalam

அன்றி, ‘‘என் இறைவனே! என்னை (மதீனாவில் நுழைய வைக்க வேண்டுமென்று நீ கருதினால்) நல்லவிதமாகவே நுழையவை. (மக்காவிலிருந்து என்னை வெளிப்படுத்த வேண்டுமென்று நீ கருதினால்) நல்லவிதமாகவே என்னை வெளிப்படுத்திவை. உன்னிடமிருந்து ஒரு வெற்றியை நீ எனக்கு உதவியாக்கித் தந்தருள்'' என்று (நபியே!) பிரார்த்திப்பீராக!

Abdulhamid Al-Baqawi