Al-Baqarah 2:113

Compare 2 Tamil translations

وَقَالَتِ الْيَهُودُ لَيْسَتِ النَّصَارَىٰ عَلَىٰ شَيْءٍ وَقَالَتِ النَّصَارَىٰ لَيْسَتِ الْيَهُودُ عَلَىٰ شَيْءٍ وَهُمْ يَتْلُونَ الْكِتَابَ ۗ كَذَٰلِكَ قَالَ الَّذِينَ لَا يَعْلَمُونَ مِثْلَ قَوْلِهِمْ ۚ فَاللَّهُ يَحْكُمُ بَيْنَهُمْ يَوْمَ الْقِيَامَةِ فِيمَا كَانُوا فِيهِ يَخْتَلِفُونَ

القرآن الكريم

DragHold to move · × to hide

இன்னும், கிறித்தவர்கள் எ(ந்த மார்க்கத்)திலுமில்லை என யூதர்கள் கூறினார்கள். இன்னும் யூதர்கள் எ(ந்த மார்க்கத்)திலுமில்லை எனக் கிறித்தவர்கள் கூறினார்கள். அவர்களோ (ஒரே) வேதத்தையே ஓதுகிறார்கள். இவ்வாறே இவர்களுடைய கூற்றைப் போன்று (வேதத்தை) அறியாதவர்கள் (யூதர்களும் கிறித்தவர்களும் பின்பற்றுவது மார்க்கமே இல்லை எனக்) கூறினார்கள். ஆக, இவர்கள் எதில் கருத்து வேறுபாடு கொண்டிருக்கிறார்களோ அதில் மறுமை நாளன்று அல்லாஹ் இவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பான்.

Omar Sharif ibn Abdussalam

இன்னும், ‘‘கிறிஸ்தவர்கள் எ(ந்த மார்க்கத்)திலுமில்லை'' என யூதர்கள் கூறுகின்றனர். (அவ்வான்ற) ‘‘யூதர்கள் எ(ந்த மார்க்கத்)திலுமில்லை'' எனக் கிறிஸ்தவர்களும் கூறுகின்றனர். ஆனால், இவ்விருவருமே (தங்களின் கூற்றுக்கு ஆதாரமாக பைபிளின் ‘பழைய ஏற்பாடாகிய' தவ்றாத் என்னும் ஒரே) வேதத்தை(த்தான்) ஓதுகிறார்கள். இவர்கள் கூறிக்கொள்வது போலவே (வேதத்தை) அறியாத (இணைவைத்து வணங்குப)வர்கள் (‘‘யூதர்களும் கிறிஸ்தவர்களும் எம்மார்க்கத்தையும் சேர்ந்தவர்கள் அல்ல'' எனக்) கூறுகிறார்கள். ஆனால், இவர்கள் செய்து கொண்டிருக்கும் இந்த தர்க்கத்தைப் பற்றி மறுமையில் அல்லாஹ் இவர்களுக்குத் தீர்ப்பளிப்பான்.

Abdulhamid Al-Baqawi