Al-Baqarah 2:118

Compare 2 Tamil translations

وَقَالَ الَّذِينَ لَا يَعْلَمُونَ لَوْلَا يُكَلِّمُنَا اللَّهُ أَوْ تَأْتِينَا آيَةٌ ۗ كَذَٰلِكَ قَالَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ مِثْلَ قَوْلِهِمْ ۘ تَشَابَهَتْ قُلُوبُهُمْ ۗ قَدْ بَيَّنَّا الْآيَاتِ لِقَوْمٍ يُوقِنُونَ

القرآن الكريم

DragHold to move · × to hide

இன்னும், (வேதத்தை) அறியாதவர்கள், “அல்லாஹ் எங்களுடன் பேச வேண்டாமா? அல்லது, ஒரு வசனம் எங்களுக்கு வரவேண்டாமா?” என்று கூறினார்கள். இப்படித்தான் இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் இவர்களின் கூற்றைப் போன்றே கூறினார்கள். இவர்களுடைய உள்ளங்கள் (அனைத்தும்) ஒன்றுக்கொன்று ஒப்பாகி (ஒரே மாதிரி) இருக்கின்றன. (உண்மையை) உறுதியாக நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு வசனங்களை திட்டமாக நாம் தெளிவாக்கி இருக்கிறோம்.

Omar Sharif ibn Abdussalam

மேலும், கல்வி (அறிவு) இல்லாதோர் ‘‘அல்லாஹ் நம்முடன் (நேரடியாகப்) பேச வேண்டாமா? அல்லது (எழுதப்பட்ட) ஒரு வசனம் (நேராக) நமக்கு வரவேண்டாமா?'' எனக் கேட்கின்றனர். இவர்கள் கேட்டது போன்றே இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (மூஸாவிடம்) கேட்டார்கள். (அவர்களுடைய உள்ளங்களை) இவர்களுடைய உள்ளங்கள் ஒத்திருக்கிறேன். (உண்மையை) நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நம் அத்தாட்சிகளை நிச்சயமாக நாம் தெளிவாக்கி இருக்கிறோம்.

Abdulhamid Al-Baqawi