Al-Baqarah 2:128

Compare 2 Tamil translations

رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا ۖ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ

القرآن الكريم

DragHold to move · × to hide

“எங்கள் இறைவா! எங்களிருவரையும் உனக்கு முழுமையாக பணிந்தவர்களாகவும் எங்கள் சந்ததியிலிருந்தும் உனக்கு முழுமையாக பணிந்து நடக்கின்ற சமுதாயத்தை ஆக்கு! இன்னும், எங்கள் ஹஜ் கிரியைகளின் இடங்களை(யும் அங்கு நாங்கள் செய்ய வேண்டிய அமல்களையும்) எங்களுக்குக் காண்பித்துக் கொடு! இன்னும், எங்களை மன்னித்துவிடு! நிச்சயமாக நீதான் தவ்பாவை (-பாவ மன்னிப்புத் தேடியவரின் பிரார்த்தனையை) அதிகம் அங்கீகரிப்பவன், மகா கருணையாளன்.”

Omar Sharif ibn Abdussalam

எங்கள் இறைவனே! எங்களிருவரையும் உனக்கு (முற்றிலும்) வழிப்படும் முஸ்லிம்களாகவும், எங்கள் சந்ததியிலிருந்தும் ஒரு கூட்டத்தினரை உனக்கு (முற்றிலும்) வழிப்படும் முஸ்லிம்களாகவும் ஆக்கிவைப்பாயாக! (‘ஹஜ்ஜூ' காலத்தில்) நாங்கள் புரியவேண்டிய வணக்கங்களை எங்களுக்கு அறிவிப்பாயாக! (நாங்கள் தவறிழைத்து விட்டாலும்) எங்களை நீ மன்னிப்பாயாக! நிச்சயமாக நீதான் மிக மன்னிப்பவன், மிக்க கருணையுடையவன்.

Abdulhamid Al-Baqawi