இன்னும், “(இந்த தூதரை உண்மையாக பின்பற்றிய) மக்கள் (-நபித்தோழர்கள்) நம்பிக்கை கொண்டது போன்று (நீங்களும்) நம்பிக்கை கொள்ளுங்கள்” என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், “அறிவீனர்கள் நம்பிக்கை கொண்டது போன்று நாங்கள் நம்பிக்கை கொள்வோமா?” என்று கூறுகிறார்கள். அறிந்து கொள்ளுங்கள்! “நிச்சயமாக அவர்கள்தான் அறிவீனர்கள்.” எனினும், அவர்கள் (அதை) அறிய மாட்டார்கள்.
Al-Baqarah 2:13
Compare 2 Tamil translations
وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ ۗ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَٰكِنْ لَا يَعْلَمُونَ
DragHold to move · × to hide
மேலும், அவர்களை நோக்கி “(மற்ற) மனிதர்கள் நம்பிக்கை கொண்டதைப் போன்று நீங்களும் (உண்மையாக) நம்பிக்கை கொள்ளுங்கள்'' என்று கூறினால், (அதற்கு) “அறிவீனர்கள் நம்பிக்கை கொண்டதுபோல் நாங்களும் நம்பிக்கை கொள்வதா?'' என்று அவர்கள் கூறுகிறார்கள். நிச்சயமாக அவர்கள்தான் முற்றிலும் அறிவீனர்கள். ஆனால், (தாங்கள்தான் அறிவீனர்கள் என்பதை) அவர்கள் அறிந்துகொள்ள மாட்டார்கள்.