Al-Baqarah 2:135

Compare 2 Tamil translations

وَقَالُوا كُونُوا هُودًا أَوْ نَصَارَىٰ تَهْتَدُوا ۗ قُلْ بَلْ مِلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا ۖ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ

القرآن الكريم

DragHold to move · × to hide

(முஸ்லிம்களை நோக்கி), “நீங்கள் யூதர்களாக அல்லது கிறித்தவர்களாக ஆகிவிடுங்கள், நேர்வழி பெறுவீர்கள்” என அவர்கள் கூறுகிறார்கள். (நபியே!) கூறுவீராக: “மாறாக, இஸ்லாமிய மார்க்கத்தில் உறுதியுடையவரான இப்ராஹீமின் மார்க்கத்தையே நாங்கள் பின்பற்றுவோம். அவர் இணைவைப்பவர்களில் இருக்கவில்லை.”

Omar Sharif ibn Abdussalam

(நம்பிக்கையாளர்களை நோக்கி) ‘‘நீங்கள் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக ஆகிவிடுங்கள். நேரானவழியை அடைந்து விடுவீர்கள்'' என அவர்கள் கூறுகிறார்கள். அதற்கு, ‘‘இல்லை! நேரான வழியைச் சார்ந்த இப்றாஹீமின் மார்க்கத்தையே (பின்பற்றுவோம்). அவர் (உங்களைப்போல்) இணைவைத்து வணங்கியவர்களில்'' இல்லை என்று (நபியே!) கூறுவீராக.

Abdulhamid Al-Baqawi