Al-Baqarah 2:142

Compare 2 Tamil translations

سَيَقُولُ السُّفَهَاءُ مِنَ النَّاسِ مَا وَلَّاهُمْ عَنْ قِبْلَتِهِمُ الَّتِي كَانُوا عَلَيْهَا ۚ قُلْ لِلَّهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ ۚ يَهْدِي مَنْ يَشَاءُ إِلَىٰ صِرَاطٍ مُسْتَقِيمٍ

القرآن الكريم

DragHold to move · × to hide

“அவர்கள் எந்த கிப்லாவை நோக்கி (தொழுபவர்களாக) இருந்தார்களோ அவர்களின் அந்த கிப்லாவை விட்டு அவர்களைத் திருப்பியது எது?’’ என (முஸ்லிம்களைப் பற்றி) மக்களில் உள்ள அறிவீனர்கள் கூறுவார்கள். (அதற்கு நபியே! நீர்) கூறுவீராக: “கிழக்கும் மேற்கும் அல்லாஹ்விற்குரியனவே! அவன் நாடுகிறவர்களை நேரான பாதைக்கு நேர்வழி காட்டுகிறான்.’’

Omar Sharif ibn Abdussalam

(நபியே! ‘‘முஸ்லிம்கள்) முன்நோக்கி வந்த கிப்லாவிலிருந்து அவர்களைத் திருப்பி விட்டது எது?'' என மனிதர்களில் சில அறிவீனர்கள் கேட்க ஆரம்பிப்பார்கள். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘கிழக்குத் திசையும் மேற்குத் திசையும் அல்லாஹ்வுக்குரியதே! அவன் விரும்புகிறவர்களை நேரான வழியில் செலுத்துவான்.''

Abdulhamid Al-Baqawi