இன்னும், (நபியே!) வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் எல்லா அத்தாட்சிகளையும் நீர் கொண்டு வந்தாலும் அவர்கள் (தமது வழிபாட்டில்) உமது கிப்லாவைப் பின்பற்றமாட்டார்கள். நீரும் அவர்களின் கிப்லாவைப் பின்பற்றுபவராக இல்லை. அவர்களிலும் சிலர் சிலரின் கிப்லாவைப் பின்பற்றுபவர்களாக இல்லை. உமக்குக் கல்வி ஞானம் வந்த பின்னர் அவர்களுடைய ஆசைகளை நீர் பின்பற்றினால் அப்போது நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஆகிவிடுவீர்.
Al-Baqarah 2:145
Compare 2 Tamil translations
وَلَئِنْ أَتَيْتَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ بِكُلِّ آيَةٍ مَا تَبِعُوا قِبْلَتَكَ ۚ وَمَا أَنْتَ بِتَابِعٍ قِبْلَتَهُمْ ۚ وَمَا بَعْضُهُمْ بِتَابِعٍ قِبْلَةَ بَعْضٍ ۚ وَلَئِنِ اتَّبَعْتَ أَهْوَاءَهُمْ مِنْ بَعْدِ مَا جَاءَكَ مِنَ الْعِلْمِ ۙ إِنَّكَ إِذًا لَمِنَ الظَّالِمِينَ
DragHold to move · × to hide
ஆகவே, (நபியே!) வேதம் கொடுக்கப்பட்ட (அ)வர்களிடம் (அவர்களை திருப்திபடுத்தக்கூடிய) அத்தாட்சிகள் அனைத்தையும் நீர் கொண்டுவந்த போதிலும் அவர்கள் உமது கிப்லாவைப் பின்பற்றப் போவதில்லை. நீரும் அவர்களுடைய கிப்லாவைப் பின்பற்றப் போவதில்லை. (வேதம் கொடுக்கப்பட்ட) அவர்களிலும் ஒருவர் மற்றொருவரின் கிப்லாவைப் பின்பற்றப் போவதுமில்லை. (ஆதலால், மக்காவை நோக்கித் தொழும்படி) உமது வஹ்யி(ன் மூலம் உத்தரவு) வந்ததன் பின்னரும் அவர்களுடைய விருப்பங்களை நீர் பின்பற்றினால் நிச்சயமாக நீரும் அநியாயக்காரர்களில் உள்ளவர்தான் (என்று கருதப்படுவீர்).