Al-Baqarah 2:167

Compare 2 Tamil translations

وَقَالَ الَّذِينَ اتَّبَعُوا لَوْ أَنَّ لَنَا كَرَّةً فَنَتَبَرَّأَ مِنْهُمْ كَمَا تَبَرَّءُوا مِنَّا ۗ كَذَٰلِكَ يُرِيهِمُ اللَّهُ أَعْمَالَهُمْ حَسَرَاتٍ عَلَيْهِمْ ۖ وَمَا هُمْ بِخَارِجِينَ مِنَ النَّارِ

القرآن الكريم

DragHold to move · × to hide

இன்னும், பின்பற்றியவர்கள் (அப்போது) கூறுவார்கள்: “(உலகிற்கு ஒருமுறை) திரும்பச் செல்வது நமக்கு சாத்தியமானால் அவர்கள் எங்களைவிட்டு (இப்போது) விலகியதுபோல் நாங்களும் அவர்களைவிட்டு விலகிவிடுவோம்.” இவ்வாறே, அவர்களின் செயல்களை அவர்கள் மீது கடும் துயரங்களாக அமையும்படி அல்லாஹ் அவர்களுக்கு காண்பிப்பான். இன்னும், அவர்கள் (நரக) நெருப்பிலிருந்து ஒருபோதும் வெளியேற மாட்டார்கள்.

Omar Sharif ibn Abdussalam

தவிர, (அவர்களைப்) பின்பற்றிய இவர்கள் மற்றொரு முறை நாம் (உலகத்துக்கு) திரும்ப செல்லக் கூடுமாயின் (எங்களுக்கு வழி காட்டிய) அவர்கள், (இப்பொழுது முற்றிலும்) எங்களைக் கைவிட்டு விலகிக் கொண்டபடியே நாங்களும் அவர்களை விட்டு நிச்சயமாக விலகிக் கொள்வோம் என்று கூறுவார்கள். (அவர்களுடைய உடல்கள் நரகில் வேதனைப்படும்.) இவ்வாறே (அவர்களுடைய உள்ளங்களும் வேதனையடைவதற்காக) அவர்களுடைய (தீய) செயல்களை அல்லாஹ் அவர்களுக்கு கைசேதமாக எடுத்துக் காண்பிப்பான். மேலும், அவர்கள் (நரக) நெருப்பிலிருந்து மீளவே மாட்டார்கள்.

Abdulhamid Al-Baqawi