Al-Baqarah 2:20

Compare 2 Tamil translations

يَكَادُ الْبَرْقُ يَخْطَفُ أَبْصَارَهُمْ ۖ كُلَّمَا أَضَاءَ لَهُمْ مَشَوْا فِيهِ وَإِذَا أَظْلَمَ عَلَيْهِمْ قَامُوا ۚ وَلَوْ شَاءَ اللَّهُ لَذَهَبَ بِسَمْعِهِمْ وَأَبْصَارِهِمْ ۚ إِنَّ اللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

القرآن الكريم

DragHold to move · × to hide

மின்னல் அவர்களின் பார்வைகளைப் பறிக்க நெருங்குகிறது. அது அவர்களுக்கு வெளிச்சம் தரும்போதெல்லாம் அதில் அவர்கள் நடந்து செல்கிறார்கள். அவர்கள் மீது இருள் சூழ்ந்தால் நின்று விடுகிறார்கள். அல்லாஹ் நாடினால் அவர்களின் செவிப்புலனையும் அவர்களின் பார்வைகளையும் திட்டமாக போக்கிவிடுவான். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.

Omar Sharif ibn Abdussalam

(தவிர) அந்த மின்னல் இவர்களின் பார்வையைப் பறிக்கப் பார்க்கிறது. அது இவர்களுக்கு வெளிச்சம் தரும்போதெல்லாம் அ(ந்த வெளிச்சத்)தில் நடக்(க விரும்பு)கிறார்கள். (ஆனால், அம்மின்னல் மறைந்து) அவர்களை இருள் சூழ்ந்துகொண்டால் (வழி தெரியாது திகைத்து) நின்று விடுகிறார்கள். இன்னும் அல்லாஹ் விரும்பினால் இவர்களுடைய கேள்விப் புலனையும் பார்வையையும் போக்கிவிடுவான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் (எவ்விதமும் செய்ய) பேராற்றலுடையவன் ஆவான்.

Abdulhamid Al-Baqawi