Al-Baqarah 2:218

Compare 2 Tamil translations

إِنَّ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ هَاجَرُوا وَجَاهَدُوا فِي سَبِيلِ اللَّهِ أُولَٰئِكَ يَرْجُونَ رَحْمَتَ اللَّهِ ۚ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ

القرآن الكريم

DragHold to move · × to hide

நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டார்களோ, இன்னும் எவர்கள் ஹிஜ்ரத் செய்து, அல்லாஹ்வுடைய பாதையில் ஜிஹாது செய்தார்களோ அவர்கள் அல்லாஹ்வுடைய கருணையை ஆசை வைக்கிறார்கள். இன்னும் அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.

Omar Sharif ibn Abdussalam

எவர்கள் மெய்யாகவே நம்பிக்கை கொண்டிருக்கிறார்களோ அவர்களும்; எவர்கள் (நிராகரிப்பாளர்களின் துன்பத்தால் ‘மக்கா'வாகிய) தம் ஊரைவிட்டும் வெளியேறினார்களோ அவர்களும்; எவர்கள் அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிகிறார்களோ அவர்களும்தான் அல்லாஹ்வின் கருணையை நிச்சயமாக எதிர்பார்க்கின்றனர். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மகா கருணையுடையவன் ஆவான்.

Abdulhamid Al-Baqawi