Al-Baqarah 2:220

Compare 2 Tamil translations

فِي الدُّنْيَا وَالْآخِرَةِ ۗ وَيَسْأَلُونَكَ عَنِ الْيَتَامَىٰ ۖ قُلْ إِصْلَاحٌ لَهُمْ خَيْرٌ ۖ وَإِنْ تُخَالِطُوهُمْ فَإِخْوَانُكُمْ ۚ وَاللَّهُ يَعْلَمُ الْمُفْسِدَ مِنَ الْمُصْلِحِ ۚ وَلَوْ شَاءَ اللَّهُ لَأَعْنَتَكُمْ ۚ إِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ

القرآن الكريم

DragHold to move · × to hide

(நீங்கள்) இம்மை, மறுமையி(ன் காரியத்தி)ல் (சிந்திப்பதற்காக அல்லாஹ் வசனங்களை உங்களுக்கு விவரிக்கிறான்). இன்னும், அனாதைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக: “அவர்களைச் சரியான முறையில் பராமரிப்பது மிக நன்மையாகும்! இன்னும், நீங்கள் (உங்களுடன்) அவர்களைச் சேர்த்துக் கொண்டால் (அது தவறில்லை. காரணம், அவர்கள்) உங்கள் சகோதரர்களே! சரியான முறையில் பராமரிப்பவரிலிருந்து கெடுதி செய்பவர்களை அல்லாஹ் அறிவான். இன்னும், அல்லாஹ் நாடினால் உங்களைச் சிரமப்படுத்தி இருப்பான். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்.”

Omar Sharif ibn Abdussalam

(நபியே!) அநாதைகளை (வளர்ப்பதை)ப் பற்றியும் உம்மிடம் கேட்கிறார்கள். (அதற்கு) நீர் கூறுவீராக: அவர்களைச் சீர்திருத்துவது மிகவும் நன்றே! மேலும், நீங்கள் அவர்களுடன் கலந்(து வசித்)திருக்க நேரிட்டால் (அவர்கள்) உங்கள் சகோதரர்களே! (ஆதலால், அவர்களுடைய சொத்தில் இருந்து அவசியமான அளவு உங்களுக்காகவும் செலவு செய்து கொள்ளலாம்.) ஆனால், ‘‘நன்மை செய்வோம்'' என்று (கூறிக் கொண்டு) தீமை செய்பவர்களை அல்லாஹ் நன்கறிவான். அல்லாஹ் நாடினால் உங்களை (மீள முடியாத) சிரமத்திற்குள்ளாக்கி விடுவான். நிச்சயமாக அல்லாஹ் (எவ்விதமும் செய்ய) வல்லவன், நுண்ணறிவுடையவன் ஆவான். (ஆகவே, அநாதைகள் விஷயத்தில் மோசம் செய்யாது மிக்க அனுதாபத்துடனும் நீதமாகவும் நடந்து கொள்ளுங்கள்.)

Abdulhamid Al-Baqawi