நாம் நம் அடிமை மீது இறக்கிய (வேதத்)தில் (அது இறைவனிடமிருந்து இறக்கப்பட்டது என்பதில்) நீங்கள் சந்தேகத்தில் இருந்தால், அது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள். இன்னும், அல்லாஹ் அல்லாத உங்கள் ஆதரவாளர்களையும் (உங்கள் உதவிக்காக) நீங்கள் அழைத்துக் கொள்ளுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (இதை செய்து காட்டுங்கள்).
Al-Baqarah 2:23
Compare 2 Tamil translations
وَإِنْ كُنْتُمْ فِي رَيْبٍ مِمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِنْ مِثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُمْ مِنْ دُونِ اللَّهِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ
DragHold to move · × to hide
நாம் (நம் தூதர் முஹம்மது என்னும்) நம் அடியாருக்கு இறக்கிய இ(வ்வேதத்)தில் நீங்கள் சந்தேகப்பட்டு (இது அல்லாஹ்வினால் அருளப்பட்டதல்ல என்று கூறுகின்ற) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வைத் தவிர உங்களை ஆமோதிப்பவர்களையும் (திறமையாளர்களையும் உதவியாளர்களையும்) நீங்கள் அழைத்து(ச் சேர்த்து)க்கொண்டு இதைப் போன்ற ஓர் அத்தியாயத்தை (அமைத்து)க் கொண்டுவாருங்கள்.