இன்னும் (நபியே!) “நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை படைக்கப்போகிறேன்” என உம் இறைவன் வானவர்களுக்கு கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக. (அதற்கு) அவர்கள் கூறினார்கள்: “அதில் விஷமம் செய்து, அதிகமாக இரத்தம் சிந்தக் கூடியவர்களை அதில் நீ படைக்(கப் போ)கிறாயா? நாங்களோ உன்னைப் புகழ்ந்து துதித்து வருகிறோம். இன்னும், உன்னைப் பரிசுத்தப்படுத்துகிறோம்.” (அதற்கு) அவன் கூறினான்: “நீங்கள் அறியாதவற்றை நிச்சயமாக நான் அறிவேன்.”
Al-Baqarah 2:30
Compare 2 Tamil translations
وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً ۖ قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَنْ يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ ۖ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ
DragHold to move · × to hide
(நபியே!) உமது இறைவன் வானவர்களை நோக்கி “நான் பூமியில் (என்) பிரதிநிதியை (ஆதமை) நிச்சயமாக ஏற்படுத்தப் போகின்றன்'' எனக் கூறிய சமயத்தில் (அதற்கு) அவர்கள் “(பூமியில்) விஷமம் செய்து இரத்தம் சிந்தக்கூடிய (சந்ததிகளைப் பெறும்) அவரை அதில் (உன் பிரதிநிதியாக) ஆக்குகிறாயா? நாங்களோ உன் பரிசுத்தத் தன்மையைக்கூறி உன் புகழைக்கொண்டு உன்னைப் புகழ்ந்து கொண்டிருக்கிறோம்'' என்று கூறினார்கள். அதற்கு அவன் “நீங்கள் அறியாதவற்றை எல்லாம் நிச்சயமாக நான் நன்கறிவேன்'' எனக் கூறிவிட்டான்.