ஆக, ஷைத்தான் அவ்விருவரையும் (அல்லாஹ்வின் கட்டளைக்கு) மாறு செய்ய தூண்டி அதிலிருந்து அகற்றினான். ஆக, அவ்விருவரும் இருந்த (சொர்க்கத்)திலிருந்து அவ்விருவரையும் அவன் வெளியேற்றினான். இன்னும், நாம் கூறினோம்: “நீங்கள் இறங்குங்கள். உங்களில் சிலர் சிலருக்கு எதிரியாவீர்கள். இன்னும், உங்களுக்குப் பூமியில் வசிக்குமிடமும் ஒரு காலம் வரை இன்பமும் உண்டு.”
Al-Baqarah 2:36
Compare 2 Tamil translations
فَأَزَلَّهُمَا الشَّيْطَانُ عَنْهَا فَأَخْرَجَهُمَا مِمَّا كَانَا فِيهِ ۖ وَقُلْنَا اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ ۖ وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَاعٌ إِلَىٰ حِينٍ
DragHold to move · × to hide
எனினும், (இப்லீஸாகிய) ஷைத்தான் அதை காரணமாக வைத்து, அவ்விருவரையும் தவறிழைக்கும்படிச் செய்து, (சொர்க்கத்திலிருந்தும்) அவ்விருவரும் இருந்த (மேலான) நிலைமையிலிருந்தும் அவர்களை வெளியேறும்படி செய்துவிட்டான். ஆகவே, (அவர்களை நோக்கி) “உங்களில் சிலர் சிலருக்கு எதிரியாவர். (சொர்க்கத்திலிருந்து) நீங்கள் இறங்கிவிடுங்கள். உங்களுக்கு பூமியில்தான் வசிக்க இடமுண்டு. அதில் சிறிது காலம் வரை சுகமும் அனுபவிக்கலாம்'' என நாம் கூறினோம்.