பிறகு, உங்கள் உள்ளங்கள் அதற்குப் பின்னர் இறுகி விட்டன. ஆக, அவை கற்களைப் போல் அல்லது இறுக்கத்தால் (அவற்றைவிட) மிகக் கடினமானவையாக உள்ளன. இன்னும் நிச்சயமாக கற்களில் நதிகள் பீறி(ட்டு ஓ)டக்கூடியவையும் திட்டமாக உண்டு. இன்னும் நிச்சயமாக பிளந்து அதிலிருந்து நீர் வெளியேறக் கூடியதும் திட்டமாக அவற்றில் உண்டு. இன்னும் நிச்சயமாக அல்லாஹ்வுடைய பயத்தால் (மேலிருந்து கிழே உருண்டு) விழக்கூடியதும் திட்டமாக அவற்றில் உண்டு. நீங்கள் செய்வதைப் பற்றி அல்லாஹ் கவனமற்றவனாக இல்லை.
Al-Baqarah 2:74
Compare 2 Tamil translations
ثُمَّ قَسَتْ قُلُوبُكُمْ مِنْ بَعْدِ ذَٰلِكَ فَهِيَ كَالْحِجَارَةِ أَوْ أَشَدُّ قَسْوَةً ۚ وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ ۚ وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ ۚ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ ۗ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ
DragHold to move · × to hide
இதற்குப் பின்னும் உங்கள் உள்ளங்கள் இறுகிவிட்டன. அவை கற்பாறைகளைப் போல் அல்லது அவற்றைவிடக் கடினமானவையாக இருக்கின்றன. (ஏனென்றால்) கற்பாறைகளிலும் தொடர்ந்து (தானாகவே) ஊற்றுகள் உதித்தோடிக் கொண்டிருப்பவையும் நிச்சயமாக உண்டு. பிளந்து அதிலிருந்து நீர் புறப்படக்கூடியவையும் அவற்றில் உண்டு. அல்லாஹ்வுடைய பயத்தால் (மலை மீதிருந்து) உருண்டு விழக் கூடியவையும் அவற்றில் உண்டு. (ஆனால், யூதர்களே! நீங்கள் தானாகவும் திருந்தவில்லை. நபிமார்களின் போதனைக்கும் செவிசாய்க்கவில்லை. அல்லாஹ்வுக்கும் பயப்படவில்லை.) உங்கள் செயலைப்பற்றி அல்லாஹ் பராமுகமாயில்லை.