இன்னும் அவர்கள் நம்பிக்கையாளர்களைச் சந்தித்தால் “(நாங்களும்) நம்பிக்கை கொள்கிறோம்” எனக் கூறுகிறார்கள். அவர்களில் சிலர் (மற்ற) சிலருடன் தனி(மையில் சந்தி)த்து விட்டால் (அந்த சிலர் தங்களை சந்தித்தவர்களிடம்) கூறுகிறார்கள்: “உங்கள் இறைவனுக்கு முன் அதைக் கொண்டு அவர்கள் உங்களிடம் தர்க்கிப்பதற்காக அல்லாஹ் உங்களுக்கு தெரிவித்ததை அவர்களுக்கு நீங்கள் அறிவிக்கிறீர்களா? நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?”
Al-Baqarah 2:76
Compare 2 Tamil translations
وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَا بَعْضُهُمْ إِلَىٰ بَعْضٍ قَالُوا أَتُحَدِّثُونَهُمْ بِمَا فَتَحَ اللَّهُ عَلَيْكُمْ لِيُحَاجُّوكُمْ بِهِ عِنْدَ رَبِّكُمْ ۚ أَفَلَا تَعْقِلُونَ
DragHold to move · × to hide
மேலும், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களைச் சந்தித்தால் (“தவ்றாத்தில் உங்கள் நபியைப் பற்றி கூறப்பட்டிருக்கிறது. ஆதலால்,) நாங்களும் (அவரை) நம்பிக்கை கொள்கிறோம்'' எனக் கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் தனித்தபொழுது ஒருவர் மற்றவரை நோக்கி “(உங்கள் வேதத்தில்) அல்லாஹ் உங்களுக்குத் தெரிவித்திருப்பதை அவர்களுக்கு நீங்கள் அறிவிக்கிறீர்களா? உங்கள் இறைவன் முன்பாக அதைக் கொண்டு அவர்கள் உங்களுடன் தர்க்கிப்பதற்காகவா? (அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்கள்.) இவ்வளவுகூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?'' என்று கூறுகின்றனர்.