இன்னும், அவர்கள் கூறுகிறார்கள்: “எண்ணப்பட்ட (சில) நாட்களைத் தவிர, நரக நெருப்பு எங்களை அறவே தீண்டாது.” (அதற்கு நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்விடம் (அவ்வாறு ஏதேனும்) ஓர் உடன்படிக்கையை (நீங்கள்) ஏற்படுத்திக் கொண்டீர்களா? (அப்படியெனில்) அல்லாஹ் தன் உறுதிமொழியை அறவே மாற்ற மாட்டான். அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது (பொய்யாக) கூறுகிறீர்களா?
Al-Baqarah 2:80
Compare 2 Tamil translations
وَقَالُوا لَنْ تَمَسَّنَا النَّارُ إِلَّا أَيَّامًا مَعْدُودَةً ۚ قُلْ أَتَّخَذْتُمْ عِنْدَ اللَّهِ عَهْدًا فَلَنْ يُخْلِفَ اللَّهُ عَهْدَهُ ۖ أَمْ تَقُولُونَ عَلَى اللَّهِ مَا لَا تَعْلَمُونَ
DragHold to move · × to hide
‘‘ஒரு சில நாள்களுக்கேத் தவிர நரக நெருப்பு எங்களைத் தீண்டவே செய்யாது'' என அவர்கள் கூறுகிறார்கள். (அதற்கு நபியே! அவர்களை) கேட்பீராக: அல்லாஹ்விடம் ஏதேனும் (அவ்வாறு) ஓர் உறுதிமொழியை நீங்கள் பெற்றிருக்கிறீர்களா? அவ்வாறாயின் நிச்சயமாக அல்லாஹ் தன் வாக்கு மாறமாட்டான். அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது (பொய்) சொல்கிறீர்களா?