Al-Baqarah 2:90

Compare 2 Tamil translations

بِئْسَمَا اشْتَرَوْا بِهِ أَنْفُسَهُمْ أَنْ يَكْفُرُوا بِمَا أَنْزَلَ اللَّهُ بَغْيًا أَنْ يُنَزِّلَ اللَّهُ مِنْ فَضْلِهِ عَلَىٰ مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ ۖ فَبَاءُوا بِغَضَبٍ عَلَىٰ غَضَبٍ ۚ وَلِلْكَافِرِينَ عَذَابٌ مُهِينٌ

القرآن الكريم

DragHold to move · × to hide

அல்லாஹ் தனது அடியார்களில், தான் நாடியவர் மீது (வேதம் எனும்) தன் அருளை இறக்குவதைப் பற்றி பொறாமைப்பட்டு, அல்லாஹ் இறக்கிய (இவ்வேதத்)தை அவர்கள் நிராகரித்து, தங்களை எதற்குப் பகரமாக விற்றார்களோ அது (மிகக்) கெட்டதாக இருக்கிறது. (தவ்ராத்தை செயல்படுத்தாததால் அவர்கள் மீதிருந்த அல்லாஹ்வின்) கோபத்திற்கு மேல் (குர்ஆனையும் இந்த நபியையும் நிராகரித்து மேலும் அல்லாஹ்வின்) கோபத்திற்குரியவர்களாக அவர்கள் ஆகிவிட்டார்கள். இன்னும், (முஹம்மத் நபியை) நிராகரிப்பவர்களுக்கு இழிவு தரக்கூடிய தண்டனை உண்டு.

Omar Sharif ibn Abdussalam

(இந்த குர்ஆனை தங்கள் மீது இறக்காமல்) அல்லாஹ் தன் அடியார்களில், தான் விரும்பியவர்கள் மீது தன் அருளை இறக்கி வைத்ததைப்பற்றி பொறாமைகொண்டு, அல்லாஹ் இறக்கிவைத்த (இ)தையே நிராகரிப்பதன் மூலமாக அவர்கள் தங்களுக்காக எதை வாங்கிக் கொண்டார்களோ அது (மிகக்) கெட்டது. (குர்ஆனைத் தங்கள் மீது இறக்கவில்லையென்ற) கோபத்தினால் (அதை நிராகரித்து அல்லாஹ்வின்) கோபத்தில் அவர்கள் சார்ந்து விட்டார்கள். ஆதலால், (அந்)நிராகரிப்பவர்களுக்கு இழிவு தரும் வேதனையுண்டு.

Abdulhamid Al-Baqawi