இவை அல்லாஹ்வின் படைப்புகளாகும். ஆக, அவனல்லாத மற்றவர்கள் எதைப் படைத்தார்கள் என்று எனக்கு நீங்கள் காண்பியுங்கள்! மாறாக, அநியாயக்காரர்கள் தெளிவான வழிகேட்டில்தான் இருக்கிறார்கள்.
Luqman 31:11
Compare 2 Tamil translations
هَٰذَا خَلْقُ اللَّهِ فَأَرُونِي مَاذَا خَلَقَ الَّذِينَ مِنْ دُونِهِ ۚ بَلِ الظَّالِمُونَ فِي ضَلَالٍ مُبِينٍ
DragHold to move · × to hide
(ஆகவே, நபியே! நீர் அவர்களை நோக்கிக் கூறுவீராக) ‘‘ இவை அனைத்தும் அல்லாஹ் படைத்தவையாகும். அவனையன்றி (நீங்கள் தெய்வங்கள் என்று கூறும்) அவை எதை படைத்திருக்கின்றன என்பதை நீங்கள் எனக்குக் காண்பியுங்கள். அவ்வாறு (ஒன்றும்) இல்லை. (அல்லாஹ்வை அன்றி மற்றவர்களை வணங்கும்) இந்த அநியாயக்காரர்கள் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கின்றனர்.