இன்னும், உங்கள் பெண்களில் மானக்கேடானதை செய்பவர்கள் மீது உங்களிலிருந்து நான்கு நபர்களை சாட்சியாகக் கொண்டு வாருங்கள். அவர்கள் (அதை உண்மைப்படுத்தி) சாட்சியளித்தால் அவர்களுக்கு மரணம் வரும் வரை அல்லது அல்லாஹ் அவர்களுக்கு (வேறு) ஒரு சட்டத்தை ஏற்படுத்தும் வரை அவர்களை வீடுகளில் தடுத்து வையுங்கள்.
An-Nisa' 4:15
Compare 2 Tamil translations
وَاللَّاتِي يَأْتِينَ الْفَاحِشَةَ مِنْ نِسَائِكُمْ فَاسْتَشْهِدُوا عَلَيْهِنَّ أَرْبَعَةً مِنْكُمْ ۖ فَإِنْ شَهِدُوا فَأَمْسِكُوهُنَّ فِي الْبُيُوتِ حَتَّىٰ يَتَوَفَّاهُنَّ الْمَوْتُ أَوْ يَجْعَلَ اللَّهُ لَهُنَّ سَبِيلًا
DragHold to move · × to hide
உங்கள் பெண்களில் எவளேனும் விபசாரம் செய்து விட்(டதாகக் குற்றம் சாட்டப்பட்)டால் (அக்குற்றத்தை நிரூபிக்க) அவளுக்காக உங்களில் நான்கு சாட்சிகளை அழையுங்கள். அவர்கள் (அதை உண்மைப்படுத்தி) சாட்சியம் கூறினால் மரணம் அவளுடைய காரியத்தை முடித்துவிடும் வரை அல்லது அல்லாஹ் அவளுக்கு ஒரு வழியை ஏற்படுத்தும் வரை அவளை வீட்டினுள் தடுத்து வைக்கவும்.