An-Nisa' 4:162

Compare 2 Tamil translations

لَٰكِنِ الرَّاسِخُونَ فِي الْعِلْمِ مِنْهُمْ وَالْمُؤْمِنُونَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ ۚ وَالْمُقِيمِينَ الصَّلَاةَ ۚ وَالْمُؤْتُونَ الزَّكَاةَ وَالْمُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ أُولَٰئِكَ سَنُؤْتِيهِمْ أَجْرًا عَظِيمًا

القرآن الكريم

DragHold to move · × to hide

எனினும் (நபியே!) அவர்களில் கல்வியில் தேர்ச்சிபெற்றவர்கள்; இன்னும் (உண்மையான) நம்பிக்கையாளர்கள் (உம்மிடம் மூடர்கள் கேள்வி கேட்டது போன்று கேட்க மாட்டார்கள். மாறாக,) உமக்கு இறக்கப்பட்டதையும், உமக்கு முன்னர் இறக்கப்பட்டதையும் தொழுகையை நிலைநிறுத்துகின்ற வானவர்களையும் நம்பிக்கை கொள்வார்கள். இன்னும், ஸகாத்தைக் கொடுப்பவர்கள்; இன்னும், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர்கள் (ஆகிய) இவர்கள் எல்லோருக்கும் மகத்தான கூலியைக் கொடுப்போம்.

Omar Sharif ibn Abdussalam

எனினும் (நபியே!) அவர்களில் கல்வியில் உறுதி மிக்கவர்களும், உண்மை நம்பிக்கையாளர்களும், உம் மீது அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், உமக்கு முன்னர் அருளப்பட்டிருந்த (வேதங்கள் யா)வற்றையும் மெய்யாகவே நம்பிக்கை கொள்வார்கள் தொழுகையையும் கடைப்பிடித்துத் தொழுபவர்கள்; ஜகாத்தும் கொடுத்து வருபவர்கள்; அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர்கள். ஆகிய இவர்களுக்கு (மறுமையில்) மகத்தான கூலியை நாம் கொடுப்போம்.

Abdulhamid Al-Baqawi