அதை (-மறுமையை) நம்பிக்கை கொள்ளாதவர்கள் அதை அவசரமாகத் தேடுகிறார்கள். (அதை) நம்பிக்கை கொண்டவர்கள் அதை பயப்படுகிறார்கள். இன்னும், நிச்சயமாக அது உண்மை(யாக நிகழக்கூடியது)தான் என்று அவர்கள் அறிவார்கள். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக மறுமை விஷயத்தில் தர்க்கிப்பவர்கள் வெகு தூரமான வழிகேட்டில்தான் இருக்கிறார்கள்.
Ash-Shura 42:18
Compare 2 Tamil translations
يَسْتَعْجِلُ بِهَا الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِهَا ۖ وَالَّذِينَ آمَنُوا مُشْفِقُونَ مِنْهَا وَيَعْلَمُونَ أَنَّهَا الْحَقُّ ۗ أَلَا إِنَّ الَّذِينَ يُمَارُونَ فِي السَّاعَةِ لَفِي ضَلَالٍ بَعِيدٍ
DragHold to move · × to hide
மறுமையை நம்பாதவர்கள் அதைப் பற்றி (எப்பொழுது வரும், எப்பொழுது வரும் என்று) அவசரப்படுகின்றனர். ஆயினும், எவர்கள் அதை நம்பியிருக்கிறார்களோ அவர்கள் அதைப் பற்றிப் பயந்து கொண்டிருப்பதுடன், நிச்சயமாக அது (வருவது) உண்மைதான் என்றும் திட்டமாக அறிவார்கள். எவர்கள் மறுமையைப் பற்றிச் சந்தேகத்தில் இருக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக வெகு தூரமானதொரு வழிகேட்டில்தான் இருக்கிறார்கள் என்பதை (நபியே!) அறிந்து கொள்வீராக.