Al-Ma'idah 5:103

Compare 2 Tamil translations

مَا جَعَلَ اللَّهُ مِنْ بَحِيرَةٍ وَلَا سَائِبَةٍ وَلَا وَصِيلَةٍ وَلَا حَامٍ ۙ وَلَٰكِنَّ الَّذِينَ كَفَرُوا يَفْتَرُونَ عَلَى اللَّهِ الْكَذِبَ ۖ وَأَكْثَرُهُمْ لَا يَعْقِلُونَ

القرآن الكريم

DragHold to move · × to hide

பஹீரா, ஸாயிபா, வஸீலா, ஹாம் (சிலைகளுக்காக நேர்ச்சை செய்யப்பட்ட) இவற்றில் எதையும் அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. எனினும், நிராகரிப்பவர்கள் அல்லாஹ் மீது பொய்யை கற்பனையாக இட்டுக்கட்டுகிறார்கள். இன்னும் அவர்களில் அதிகமானோர் (உண்மையை சிந்தித்து) புரியமாட்டார்கள்.

Omar Sharif ibn Abdussalam

பஹீரா, ஸாயிபா, வஸீலா, ஹாம் (போன்ற) இவையெல்லாம் அல்லாஹ் ஏற்படுத் தியவையல்ல. எனினும், நிராகரிப்பவர்கள்தான் (இவை அல்லாஹ் ஏற்படுத்தியவை என) அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனை செய்(து கூறு)கின்றனர். அவர்களில் பலர் (உண்மையை) விளங்காதவர்களாகவே இருக்கின்றனர்.

Abdulhamid Al-Baqawi