Al-Ma'idah 5:111

Compare 2 Tamil translations

وَإِذْ أَوْحَيْتُ إِلَى الْحَوَارِيِّينَ أَنْ آمِنُوا بِي وَبِرَسُولِي قَالُوا آمَنَّا وَاشْهَدْ بِأَنَّنَا مُسْلِمُونَ

القرآن الكريم

DragHold to move · × to hide

இன்னும், என்னையும், என் தூதரையும் நம்பிக்கை கொள்ளுங்கள் என்று (உமது) சிஷ்யர்களுக்கு மனதில் உதிப்பை நான் போட்ட சமயத்தை நினைவு கூர்வீராக! (அதற்கவர்கள்) “நம்பிக்கை கொண்டோம்; இன்னும், நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள்” என்பதற்கு (நீர்) சாட்சி அளிப்பீராக! என்று (உம்மிடம்) கூறினார்கள்.

Omar Sharif ibn Abdussalam

என்னையும், என் தூதரையும் (அதாவது உம்மையும்) நம்பிக்கை கொள்ளும்படி (அப்போஸ்தலர்கள் என்னும் உமது) சிஷ்யர்களுக்கு நான் வஹ்யின் மூலம் தெரிவித்த சமயத்தில், அவர்கள் (அவ்வாறே) நாங்கள் நம்பினோம்; நிச்சயமாக நாங்கள் (இறைவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்த) முஸ்லிம்கள் என்பதற்கு நீர் சாட்சியாக இருக்கவும்! என்று கூறியதையும் நினைத்துப் பார்ப்பீராக (என்றும் அந்நாளில் கூறுவான்).

Abdulhamid Al-Baqawi