Al-Ma'idah 5:117

Compare 2 Tamil translations

مَا قُلْتُ لَهُمْ إِلَّا مَا أَمَرْتَنِي بِهِ أَنِ اعْبُدُوا اللَّهَ رَبِّي وَرَبَّكُمْ ۚ وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيدًا مَا دُمْتُ فِيهِمْ ۖ فَلَمَّا تَوَفَّيْتَنِي كُنْتَ أَنْتَ الرَّقِيبَ عَلَيْهِمْ ۚ وَأَنْتَ عَلَىٰ كُلِّ شَيْءٍ شَهِيدٌ

القرآن الكريم

DragHold to move · × to hide

“நீ எனக்கு ஏவியதை, அதாவது, என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள் என்பதைத் தவிர (என்னை வணங்கும்படி) அவர்களுக்கு நான் கூறவில்லை. இன்னும், நான் அவர்களுடன் இருந்த வரை அவர்கள் மீது சாட்சியாளனாக இருந்தேன். ஆக, நீ என்னைக் கைப்பற்றியபோது (-என்னை நீ வானத்தில் உயர்த்திவிட்டபோது) நீதான் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாவற்றின் மீதும் சாட்சியாளன்.”

Omar Sharif ibn Abdussalam

நீ எனக்கு ஏவியபடியே நான் (அவர்களை நோக்கி), ‘‘நீங்கள் எனக்கும் உங்களுக்கும் இறைவனாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்'' என்றுதான் கூறினேன். தவிர, வேறொன்றையும் (ஒருபோதும்) நான் கூறவில்லை. நான் அவர்களுடன் இருந்த வரை அவர்களின் செயலை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீதான் அவர்களைக் கவனித்தவனாக இருந்தாய். அனைத்திற்கும் நீயே சாட்சி.

Abdulhamid Al-Baqawi