Al-Ma'idah 5:73

Compare 2 Tamil translations

لَقَدْ كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ ثَالِثُ ثَلَاثَةٍ ۘ وَمَا مِنْ إِلَٰهٍ إِلَّا إِلَٰهٌ وَاحِدٌ ۚ وَإِنْ لَمْ يَنْتَهُوا عَمَّا يَقُولُونَ لَيَمَسَّنَّ الَّذِينَ كَفَرُوا مِنْهُمْ عَذَابٌ أَلِيمٌ

القرآن الكريم

DragHold to move · × to hide

“நிச்சயமாக அல்லாஹ் - இறைவன் என்பவன் (பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகிய) மூவரில் ஒருவன்தான்’’ என்று கூறியவர்கள் திட்டவட்டமாக நிராகரித்தார்கள். (உண்மையில் வணங்கத் தகுதியான) ஒரே ஒரு இறைவனைத் தவிர இறைவன் (யாரும்) இல்லை. இன்னும், அவர்கள் கூறுவதிலிருந்து அவர்கள் விலகவில்லையெனில் துன்புறுத்தும் தண்டனை நிராகரித்தவர்களை நிச்சயமாக அடையும்.

Omar Sharif ibn Abdussalam

‘‘நிச்சயமாக அல்லாஹ் (பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகிய இம்)மூவரில் ஒருவன்தான்'' என்று கூறியவர்களும் மெய்யாகவே நிராகரிப்பாளர்களாகி விட்டார்கள். ஏனென்றால், ஒரே ஓர் இறைவனைத் தவிர வேறு இறைவன் இல்லவே இல்லை. (ஆகவே, இவ்வாறு) அவர்கள் கூறுவதிலிருந்து விலகிக் கொள்ளாவிட்டால் அவர்களில் (அல்லாஹ்வை) நிராகரிப்பவர்களை துன்புறுத்தும் வேதனை நிச்சயமாக வந்தடையும்.

Abdulhamid Al-Baqawi