Al-Mujadilah 58:1

Compare 2 Tamil translations

قَدْ سَمِعَ اللَّهُ قَوْلَ الَّتِي تُجَادِلُكَ فِي زَوْجِهَا وَتَشْتَكِي إِلَى اللَّهِ وَاللَّهُ يَسْمَعُ تَحَاوُرَكُمَا ۚ إِنَّ اللَّهَ سَمِيعٌ بَصِيرٌ

القرآن الكريم

DragHold to move · × to hide

(நபியே!) உம்மிடம் தனது கணவரின் விஷயத்தில் விவாதிக்கின்றவளின் பேச்சை திட்டமாக அல்லாஹ் செவியுற்றான். இன்னும், அவள் (தனது கவலையை) அல்லாஹ்விடம் முறையி(ட்டு அதற்கான தீர்வை மன்றா)டுகிறாள். அல்லாஹ் உங்கள் இருவரின் உரையாடலை செவியுறுகிறான். நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன், உற்று நோக்குபவன்.

Omar Sharif ibn Abdussalam

(நபியே!) எவள் தன் கணவரைப் பற்றி உம்மிடம் தர்க்கித்து (அவரைப் பற்றி) அல்லாஹ்விடமும் முறையிட்டாளோ, அவளுடைய முறையீட்டை அல்லாஹ் நிச்சயமாகக் கேட்டுக் கொண்டான். (அதைப்பற்றி) உங்கள் இருவரின் தர்க்க வாதத்தையும் அல்லாஹ் செவியுற்றான். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) செவியுறுபவன், (ஒவ்வொருவரின் செயலையும்) உற்று நோக்குபவன் ஆவான்.

Abdulhamid Al-Baqawi