அவன்தான் உண்மையில் வானங்களையும், பூமியையும் படைத்தான். இன்னும், (மறுமை நிகழும்போது வானமும் பூமியும் வேறு வானமாகவும் பூமியாகவும் மாற்றப்படும். அப்போது) ‘ஆகுக!’ என அவன் கூறும் அந்த நாளில் உடனே (அது அவன் நாடியபடி அவை இரண்டும்) ஆகிவிடும். அவனுடைய சொல்லே உண்மையாகும். எக்காளம் (சூர்) ஊதப்படும் நாளில் அவனுக்கே ஆட்சி உரியது; (அவன்) மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிந்தவன்; அவனே ஞானமிக்கவன், ஆழ்ந்தறிபவன்.
Al-An'am 6:73
Compare 2 Tamil translations
وَهُوَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ بِالْحَقِّ ۖ وَيَوْمَ يَقُولُ كُنْ فَيَكُونُ ۚ قَوْلُهُ الْحَقُّ ۚ وَلَهُ الْمُلْكُ يَوْمَ يُنْفَخُ فِي الصُّورِ ۚ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ ۚ وَهُوَ الْحَكِيمُ الْخَبِيرُ
DragHold to move · × to hide
வானங்களையும், பூமியையும் படைத்தவன் உண்மையாகவே அவன்தான். (அவன் எதையும் படைக்கக் கருதும்போது) ‘ஆகுக!' என அவன் கூறுவதுதான் (தாமதம்.) உடனே (அது) ஆகிவிடும்.அவனுடைய சொல்தான் உண்மை சூர் (எக்காளம்) ஊதப்படும் நாளில் அதிகாரம் அவன் ஒருவனுடையதாகவே இருக்கும். மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அவன் நன்கறிவான். அவன் ஞானமுடையவனாகவும் (அனைத்தையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கிறான்.