Al-Jumu'ah 62:9

Compare 2 Tamil translations

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَىٰ ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ۚ ذَٰلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ

القرآن الكريم

DragHold to move · × to hide

நம்பிக்கையாளர்களே! ஜுமுஆ தினத்தன்று தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வின் நினைவின் பக்கம் (வெள்ளிக் கிழமை பிரசங்கத்தை செவியுறுவதன் பக்கம்) நீங்கள் விரையுங்கள்! இன்னும், வியாபாரத்தை விட்டுவிடுங்கள்! நீங்கள் (அதன் நன்மையை) அறிகிறவர்களாக இருந்தால் அதுதான் உங்களுக்கு மிகச் சிறந்ததாகும்.

Omar Sharif ibn Abdussalam

நம்பிக்கையாளர்களே! வெள்ளிக்கிழமையன்று ஜூமுஆ தொழுகைக்காக (அதான் சொல்லி) நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டு விட்டு, அல்லாஹ்வை நினைவுகூர நீங்கள் விரைந்து செல்லுங்கள். அறிவுடையவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்கு மிக நன்று. (இதை நீங்கள் அறிந்து கொள்வீர்களாக!)

Abdulhamid Al-Baqawi