ஆதமின் சந்ததிகளே! (என்) தூதர்கள் உங்களில் இருந்தே நிச்சயமாக உங்களிடம் என் வசனங்களை உங்களுக்கு விவரித்தவர்களாக வந்தால், (அவர்களுக்கு கீழ்ப்படியுங்கள், இன்னும் அவர்கள் கொண்டு வந்ததை பின்பற்றுங்கள்!) எவர்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்தார்களோ, இன்னும், (தங்களை) சீர்திருத்தினார்களோ அவர்கள் மீது பயமில்லை; இன்னும், அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்.
Al-A'raf 7:35
Compare 2 Tamil translations
يَا بَنِي آدَمَ إِمَّا يَأْتِيَنَّكُمْ رُسُلٌ مِنْكُمْ يَقُصُّونَ عَلَيْكُمْ آيَاتِي ۙ فَمَنِ اتَّقَىٰ وَأَصْلَحَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
DragHold to move · × to hide
ஆதமுடைய மக்களே! (என்) தூதர்கள் உங்களில் இருந்தே நிச்சயமாக உங்களிடம் வந்து என் வசனங்களை மெய்யாகவே உங்களுக்கு ஓதிக் காண்பிக்கும்போது, (அவற்றை செவியுற்ற உங்களில்) எவர்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து, (பாவங்களிலிருந்து) விலகி, நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை; அவர்கள் துயரம் அடையவும் மாட்டார்கள்.