இன்னும், அவர்களில் முன்சென்ற கூட்டம் அவர்களில் பின்வந்த கூட்டத்திற்கு கூறும்: “(நாங்கள் நம்பிக்கை கொள்ளாதது போன்றே நீங்களும் நம்பிக்கை கொள்ளவில்லை. எங்களைப் பற்றிய செய்திகள் உங்களுக்கு சொல்லப்பட்டும் நீங்கள் படிப்பினை பெறவில்லை.) ஆகவே, “எங்களை விட உங்களுக்கு ஒரு மேன்மையும் இல்லை.” (அப்போது, அல்லாஹ் - அவர்கள் எல்லோரையும் நோக்கி - கூறுவான்:) ஆக, நீங்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாக (எனது) தண்டனையைச் சுவையுங்கள்.”
Al-A'raf 7:39
Compare 2 Tamil translations
وَقَالَتْ أُولَاهُمْ لِأُخْرَاهُمْ فَمَا كَانَ لَكُمْ عَلَيْنَا مِنْ فَضْلٍ فَذُوقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْسِبُونَ
DragHold to move · × to hide
அவர்களில் முன் சென்றவர்கள், பின் சென்றவர்களை நோக்கி ‘‘எங்களைவிட உங்களுக்கு ஒரு மேன்மையும் கிடையாது. ஆதலால், நீங்களாகவே தேடிக்கொண்ட (தீய) செயலின் காரணமாக (நீங்களும் இரு மடங்கு) வேதனையைச் சுவையுங்கள்'' என்று கூறுவார்கள்.