Al-A'raf 7:46

Compare 2 Tamil translations

وَبَيْنَهُمَا حِجَابٌ ۚ وَعَلَى الْأَعْرَافِ رِجَالٌ يَعْرِفُونَ كُلًّا بِسِيمَاهُمْ ۚ وَنَادَوْا أَصْحَابَ الْجَنَّةِ أَنْ سَلَامٌ عَلَيْكُمْ ۚ لَمْ يَدْخُلُوهَا وَهُمْ يَطْمَعُونَ

القرآن الكريم

DragHold to move · × to hide

இன்னும், அவ்விருவருக்குமிடையில் ஒரு மதில் இருக்கும். இன்னும், (சொர்க்கத்தின் உயரமான சுவர்களாகிய) சிகரங்கள் மீது (சில) மனிதர்கள் இருப்பார்கள். அவர்கள் (சொர்க்க, நரகத்தில் உள்ள) ஒவ்வொருவரையும் அவர்களின் முக அடையாளத்தை வைத்து அறிவார்கள். இவர்கள், சொர்க்கவாசிகளை நோக்கி “உங்கள் மீது ஸலாம் - ஈடேற்றம் உண்டாகுக!” என்று (கூறி) அழைப்பார்கள். (சிகரத்தில் இருக்கும்) அவர்கள் (இதுவரை) அ(ந்த சொர்க்கத்)தில் நுழையவில்லை. அவர்களோ (அதில் நுழைய) ஆசைப்படுவார்கள்.

Omar Sharif ibn Abdussalam

(நரகவாசிகளும் சொர்க்கவாசிகளும் ஆகிய) இவ்விருவருக்குமிடையில் ஒரு மதில் இருக்கும். அந்த மதிலின் சிகரத்தில் சில மனிதர்கள் இருப்பார்கள். (நரகவாசி சொர்க்கவாசியாகிய) ஒவ்வொருவரையும் அவர்களின் (முகக்) குறியைக் கொண்டே இவர்கள் அறிந்து கொள்வார்கள். இவர்கள் சொர்க்கவாசிகளை நோக்கி ‘‘(இறைவனுடைய) சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகுக!'' என்று சப்தமிட்டுக் கூறுவார்கள். (சிகரத்தில் இருக்கும்) இவர்கள் (இதுவரையிலும்) சொர்க்கத்தில் நுழையவில்லை. எனினும், அவர்கள் (அதில் நுழைவதை) மிக ஆவலுடன் ஆசைப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.

Abdulhamid Al-Baqawi