திட்டவட்டமாக நூஹை அவருடைய சமுதாயத்திற்கு (தூதராக) அனுப்பினோம். ஆக, அவர் கூறினார்: “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள். அவன் அன்றி (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் யாரும் உங்களுக்கில்லை. உங்கள் மீது மகத்தான நாளின் தண்டனையை நிச்சயமாக நான் பயப்படுகிறேன்.”
Al-A'raf 7:59
Compare 2 Tamil translations
لَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَىٰ قَوْمِهِ فَقَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ إِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيمٍ
DragHold to move · × to hide
நிச்சயமாக நாம் நூஹை அவருடைய மக்களுக்கு (நம்) தூதராக அனுப்பி வைத்தோம். அவர் (அவர்களை நோக்கி) ‘‘என் மக்களே! நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கில்லை. (இதற்கு நீங்கள் மாறு செய்தால்) உங்களுக்கு (வரக்கூடிய) மகத்தானதொரு நாளின் வேதனையை நான் பயப்படுகிறேன்'' என்று கூறினார்.