Al-Baqarah 2:108

Compare 2 Tamil translations

أَمْ تُرِيدُونَ أَنْ تَسْأَلُوا رَسُولَكُمْ كَمَا سُئِلَ مُوسَىٰ مِنْ قَبْلُ ۗ وَمَنْ يَتَبَدَّلِ الْكُفْرَ بِالْإِيمَانِ فَقَدْ ضَلَّ سَوَاءَ السَّبِيلِ

القرآن الكريم

DragHold to move · × to hide

(இதற்கு) முன்னர் மூஸாவிடம் கேள்வி கேட்கப்பட்டது போல் உங்கள் தூதரிடம் நீங்கள் கேள்வி கேட்க விரும்புகிறீர்களா? எவர் (இந்த தூதரையும் அவர் கூறுவதையும்) நம்பிக்கை கொள்வதற்கு பதிலாக (அதை) நிராகரிப்பதை எடுத்துக் கொள்வாரோ அவர் திட்டமாக நேர்வழியிலிருந்து வழிதவறிவிட்டார்.

Omar Sharif ibn Abdussalam

(நம்பிக்கையாளர்களே!) இதற்கு முன்னர் மூஸாவிடம் (அவருடைய மக்கள் வீணான கேள்விகளைக்) கேட்டதைப் போல் நீங்களும் உங்களுக்கு அனுப்பப்பட்ட தூதரிடம் கேட்க விரும்புகிறீர்களா? எவர் (இத்தகைய கேள்விகளைக் கேட்டு) தன் நம்பிக்கையை நிராகரிப்பைக் கொண்டு மாற்றிக் கொள்கிறாரோ அவர் நேரான வழியைவிட்டு மெய்யாகவே தவறிவிட்டார்.

Abdulhamid Al-Baqawi