Al-Baqarah 2:109

Compare 2 Tamil translations

وَدَّ كَثِيرٌ مِنْ أَهْلِ الْكِتَابِ لَوْ يَرُدُّونَكُمْ مِنْ بَعْدِ إِيمَانِكُمْ كُفَّارًا حَسَدًا مِنْ عِنْدِ أَنْفُسِهِمْ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ الْحَقُّ ۖ فَاعْفُوا وَاصْفَحُوا حَتَّىٰ يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ ۗ إِنَّ اللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

القرآن الكريم

DragHold to move · × to hide

வேதக்காரர்களில் அதிகமானவர்கள் - அவர்களுக்கு உண்மை (இன்னதெனத்) தெளிவானதற்கு பின்னர், அவர்களுடைய உள்ளங்களில் (உங்கள் மீது) உள்ள பொறாமையினால், - “நீங்கள் நம்பிக்கை கொண்டதற்கு பின்னர் உங்களை நிராகரிப்பாளர்களாக மாற்ற வேண்டுமே” என்று விரும்புகிறார்கள். ஆக, அல்லாஹ் தனது கட்டளையைக் கொண்டுவருகின்ற வரை (அவர்களை) மன்னித்து விடுங்கள்! இன்னும், புறக்கணித்து விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.

Omar Sharif ibn Abdussalam

வேதத்தையுடையவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கையாளர்களாகிய உங்களை நிராகரிப்பவர்களாக மாற்றிவிட வேண்டுமே! என்று விரும்புகிறார்கள். அவர்களுக்கு உண்மை (இன்னதெனத்) தெளிவாகத் தெரிந்த பின்னும் இவ்வாறு அவர்கள் விரும்புவதன் காரணமெல்லாம் அவர்களுக்கு (உங்கள் மீது)ள்ள பொறாமைதான். ஆகவே, அல்லாஹ்வுடைய (மற்றொரு) கட்டளை வரும்வரை (அவர்களை) நீங்கள் மன்னித்தும் புறக்கணித்தும் வாருங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் மிகவும் பேராற்றலுடையவன் ஆவான்.

Abdulhamid Al-Baqawi