Al-Ma'idah 5:45

Compare 2 Tamil translations

وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاصٌ ۚ فَمَنْ تَصَدَّقَ بِهِ فَهُوَ كَفَّارَةٌ لَهُ ۚ وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ

القرآن الكريم

DragHold to move · × to hide

இன்னும், அவர்கள் மீது அ(ந்த தவ்ராத்)தில் சட்டமாக விதித்தோம்: “நிச்சயமாக உயிருக்குப் பதிலாக உயிர், கண்ணுக்குப் பதிலாக கண், மூக்குக்குப் பதிலாக மூக்கு, காதுக்குப் பதிலாக காது, பல்லுக்குப் பதிலாக பல், இன்னும் (ஒருவர் மற்றவருக்கு ஏற்படுத்திய) காயங்கள் (எல்லாம் இவ்வாறுதான்) பழிவாங்கப்படும்” ஆக, எவர் அதை (பழிவாங்குவதை) மன்னிப்பாரோ அது அவருக்கு (அவரின் பாவங்களுக்கு) பரிகாரமாகும். எவர்கள் அல்லாஹ் இறக்கியதின் மூலம் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தான் அநியாயக்காரர்கள் ஆவார்கள்!

Omar Sharif ibn Abdussalam

அவர்களுக்காக அ(வர்களுடைய வேதமாகிய தவ்றாத்)தில் நாம் கட்டளையிட்டிருந்தோம்: ‘‘உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல், காயங்களுக்கும் (காயமாக) நிச்சயமாக பழி வாங்கப்படும்'' என்பதாக. எனினும், எவரேனும் பழிவாங்குவதை (மன்னித்து) நன்மைக்காக விட்டுவிட்டால் அது அவரு(டைய தீய செயலு)க்குப் பரிகாரமாகிவிடும். எவர்கள், அல்லாஹ் இறக்கி வைத்தவற்றைக்கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் நிச்சயமாக அநியாயக்காரர்கள்தான்!

Abdulhamid Al-Baqawi