Al-Ma'idah 5:46

Compare 2 Tamil translations

وَقَفَّيْنَا عَلَىٰ آثَارِهِمْ بِعِيسَى ابْنِ مَرْيَمَ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ مِنَ التَّوْرَاةِ ۖ وَآتَيْنَاهُ الْإِنْجِيلَ فِيهِ هُدًى وَنُورٌ وَمُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ مِنَ التَّوْرَاةِ وَهُدًى وَمَوْعِظَةً لِلْمُتَّقِينَ

القرآن الكريم

DragHold to move · × to hide

இன்னும், அவர்களுடைய அடிச்சுவடுகளில் அவர்களை பின்தொடர்ந்து மர்யமுடைய மகன் ஈஸாவை (இஸ்ரவேலர்களுக்கு நபியாக) அனுப்பினோம். அவர் தனக்கு முன்னுள்ள தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக இருந்தார். இன்னும், அவருக்கு ‘இன்ஜீல்’ஐ கொடுத்தோம். அதில் நேர்வழியும் ஒளியும் இருக்கின்றன. இன்னும் தனக்கு முன்னுள்ள தவ்ராத்தை உண்மைப்படுத்தக்கூடியதாக, நேர்வழியாக, அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு ஓர் உபதேசமாக இன்ஜீலை ஆக்கினோம்.

Omar Sharif ibn Abdussalam

(முன்னிருந்த நபிமார்களாகிய) அவர்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமுடைய மகன் ஈஸாவையும் நாம் அனுப்பிவைத்தோம். அவர் தன்முன்னிருந்த தவ்றாத்தை உண்மையாக்கி வைப்பவராக இருந்தார். அவருக்கு ‘இன்ஜீல்' என்னும் வேதத்தையும் நாம் அருளினோம். அதிலும் நேர்வழியும் ஒளியும் இருக்கின்றன. அது தன் முன்னுள்ள தவ்றாத்தை உண்மையாக்கி வைக்கிறது. இறையச்சமுடையவர்களுக்கு அது ஒரு நல்லுபதேசமாகவும், நேரான வழியாகவும் இருக்கிறது.

Abdulhamid Al-Baqawi