Al-A'raf 7:19

Compare 2 Tamil translations

وَيَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ فَكُلَا مِنْ حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ

القرآن الكريم

DragHold to move · × to hide

இன்னும், “ஆதமே! நீரும் உம் மனைவியும் சொர்க்கத்தில் வசித்திருங்கள். நீங்கள் இருவரும் நாடிய இடத்தில் புசியுங்கள். இந்த மரத்தை நெருங்காதீர்கள். அப்படி நெருங்கினால் அநியாயக்காரர்களில் ஆகிவிடுவீர்கள்.”

Omar Sharif ibn Abdussalam

(பின்னர், இறைவன் ஆதமை நோக்கி) ‘‘ஆதமே! நீர் உமது மனைவியுடன் இச்சோலையில் வசித்திரும். நீங்கள் இருவரும் விரும்பிய இடத்திலெல்லாம் (சென்று விரும்பியவற்றையெல்லாம்) புசியுங்கள். எனினும், இந்த மரத்தின் சமீபத்தில்கூட நீங்கள் செல்லாதீர்கள். (அவ்வாறு சென்றால்) அதனால் உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொண்டவர்களாக ஆகிவிடுவீர்கள்'' (என்று கூறினான்.)

Abdulhamid Al-Baqawi