ஆக, அவர்கள் இருவருக்கும் மறைக்கப்பட்டிருந்த அவர்கள் இருவரின் வெட்கத்தலங்களை அவர்கள் இருவருக்கும் வெளிப்படுத்தி காட்டுவதற்காக ஷைத்தான் அவ்விருவருக்கும் (மனதில்) ஊசலாட்டத்தை உண்டாக்கினான். “நீங்கள் இருவரும் வானவர்களாக ஆகி விடுவீர்கள் அல்லது (சொர்க்கத்தில்) நிரந்தரமாக இருப்பவர்களில் ஆகிவிடுவீர்கள் என்பதற்காகவே தவிர இம்மரத்தை விட்டு உங்களிருவரின் இறைவன் உங்களிருவரையும் தடுக்கவில்லை” என்று கூறினான்.
Al-A'raf 7:20
Compare 2 Tamil translations
فَوَسْوَسَ لَهُمَا الشَّيْطَانُ لِيُبْدِيَ لَهُمَا مَا وُورِيَ عَنْهُمَا مِنْ سَوْآتِهِمَا وَقَالَ مَا نَهَاكُمَا رَبُّكُمَا عَنْ هَٰذِهِ الشَّجَرَةِ إِلَّا أَنْ تَكُونَا مَلَكَيْنِ أَوْ تَكُونَا مِنَ الْخَالِدِينَ
DragHold to move · × to hide
(எனினும்) அவ்விருவருக்கும் மறைந்திருந்த அவர்களுடைய மானத்தை அவர்களுக்கு வெளிப்படுத்துவதற்காக (இப்லீஸாகிய) ஷைத்தான் (தவறான எண்ணத்தை) அவர்கள் மனதில் ஊசலாடச் செய்து அவர்களை நோக்கி, ‘‘(அதன் கனியைப் புசித்தால்) நீங்கள் இருவரும் வானவர்களாகவோ அல்லது மரணமற்றவர்களாகவோ ஆகிவிடுவீர்கள் என்பதற்காகவே தவிர (வேறெதற்காகவும்) உங்கள் இறைவன் இம்மரத்தை விட்டு உங்களைத் தடுக்கவில்லை'' என்று கூறியதுடன்,