Al-A'raf 7:53

Compare 2 Tamil translations

هَلْ يَنْظُرُونَ إِلَّا تَأْوِيلَهُ ۚ يَوْمَ يَأْتِي تَأْوِيلُهُ يَقُولُ الَّذِينَ نَسُوهُ مِنْ قَبْلُ قَدْ جَاءَتْ رُسُلُ رَبِّنَا بِالْحَقِّ فَهَلْ لَنَا مِنْ شُفَعَاءَ فَيَشْفَعُوا لَنَا أَوْ نُرَدُّ فَنَعْمَلَ غَيْرَ الَّذِي كُنَّا نَعْمَلُ ۚ قَدْ خَسِرُوا أَنْفُسَهُمْ وَضَلَّ عَنْهُمْ مَا كَانُوا يَفْتَرُونَ

القرآن الكريم

DragHold to move · × to hide

(மக்காவாசிகள்) அதன் முடிவைத் தவிர (வேறு எதையாவது) எதிர்பார்க்கின்றனரா? அதன் முடிவு நாள் வரும் போது முன்னர் அதை மறந்(திருந்)தவர்கள், “எங்கள் இறைவனின் தூதர்கள் உண்மையைக் கொண்டு வந்தார்கள். ஆக, சிபாரிசு செய்பவர்களில் எவரும் எங்களுக்கு உண்டா? அவர்கள் எங்களுக்கு சிபாரிசு செய்வார்களே! அல்லது, நாங்கள் (உலகத்திற்கு) திருப்பி அனுப்பப்பட்டால் (முன்னர்) நாங்கள் செய்து கொண்டிருந்த (கெட்ட)வை அல்லாத (நல்ல காரியத்)தை செய்வோமே!” என்று கூறுவார்கள். (அவர்கள்) தங்களுக்குத் தாமே நஷ்டமிழைத்துக் கொண்டனர். இன்னும், (இவைதான் எங்கள் கடவுள்கள் என்று) அவர்கள் புனைந்து கொண்டிருந்த (சிலைகள்; இன்னும், அவை போன்ற)வை எல்லாம் அவர்களை விட்டு (அந்நாளில்) மறைந்துவிடும்.

Omar Sharif ibn Abdussalam

(மக்காவாசிகளாகிய) இவர்கள் (தங்களுக்கு எச்சரிக்கப்பட்டு வந்த) தண்டனை (நாள்) வருவதைத் தவிர (வேறு எதையும்) எதிர்பார்க்கின்றனரா? அந்தத் தண்டனை நாள் வந்தபொழுது இதற்கு முன் அதை (முற்றிலும்) மறந்திருந்த இவர்கள், ‘‘நிச்சயமாக எங்கள் இறைவனின் தூதர்கள் (எங்களிடம்) சத்திய (வேத)த்தைக் கொண்டு வந்தனர். (இன்று) எங்களுக்குப் பரிந்து பேசுபவர்கள் எவரும் உண்டா? அவ்வாறாயின் அவர்கள் எங்களுக்குப் பரிந்து பேசவும் அல்லது எங்களை (உலகத்திற்கு)த் திரும்ப அனுப்பப்பட்டால் (முன்னர்) நாங்கள் செய்து கொண்டிருந்தவற்றைத் தவிர்த்து வேறு (நன்மைகளையே) செய்வோம்'' என்று கூறுவார்கள். நிச்சயமாக இவர்கள் தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர். மேலும், இவர்கள் (தங்கள் தெய்வங்களென) பொய்யாகக் கூறிக் கொண்டிருந்தவை அனைத்தும் இவர்களை விட்டு மறைந்து (மாயமாகி) விடும்.

Abdulhamid Al-Baqawi