Al-A'raf 7:54

Compare 2 Tamil translations

إِنَّ رَبَّكُمُ اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَىٰ عَلَى الْعَرْشِ يُغْشِي اللَّيْلَ النَّهَارَ يَطْلُبُهُ حَثِيثًا وَالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُومَ مُسَخَّرَاتٍ بِأَمْرِهِ ۗ أَلَا لَهُ الْخَلْقُ وَالْأَمْرُ ۗ تَبَارَكَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ

القرآن الكريم

DragHold to move · × to hide

நிச்சயமாக உங்கள் (காரியங்கள் அனைத்தையும் சீர்ப்படுத்துபவனும், உங்களை நிர்வகிப்பவனுமாகிய உங்கள்) இறைவன் அல்லாஹ்தான் (-எல்லாப் படைப்புகளும் உண்மையில் வணங்குவதற்கு தகுதியானவன்.) அவன்தான் வானங்களையும், பூமியையும், சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் (இவை எல்லாம் அவனுக்கு) பணிந்தவையாக இருக்கும் நிலையில் தனது கட்டளையினால் ஆறு நாட்களில் படைத்தான். பிறகு, அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான். அவனே இரவால் பகலை மூடுகிறான். அது தீவிரமாக அதைத் தேடுகிறது (-பின் தொடர்கிறது). அறிந்து கொள்ளுங்கள் “படைத்தல் இன்னும் (-படைப்புகள் அனைத்தின் மீது) அதிகாரம் செலுத்துதல்” அவனுக்கே உரியன. அகிலங்களின் இறைவனான அல்லாஹ் மிகுந்த பாக்கியவான், மிகவும் உயர்ந்தவன், மிக்க மகத்துவமானவன் ஆவான்.

Omar Sharif ibn Abdussalam

நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்து, அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான். அவனே இரவால் பகலை மூடுகிறான்; (பகலால் இரவை மூடுகிறான்.) அது வெகு தீவிரமாகவே அதைப் பின் தொடர்கிறது. (அவனே) சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் (படைத்தான். இவை அனைத்தும்) அவனது கட்டளைக்கு கட்டுப்பட்டவையாக படைத்தான். (படைத்தலும்) படைப்பினங்களும் (அவற்றின்) ஆட்சியும் அவனுக்கு உரியதல்லவா? அனைத்து உலகங்களையும் படைத்து, வளர்த்து, பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ் மிக்க பாக்கியமுடையவன்.

Abdulhamid Al-Baqawi